21.07.24 முதல் 27.07.2024வரை
கடின உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைவீர்கள். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். சமூகத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் கடன் பிரச்னைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி, பணவரவு எதிர்பார்த்தப்படி இருக்கும். மாணவர்கள் சாமர்த்தியமான செயல்களால் ஆசிரியர்களின் மனதில் இடம் பிடிப்பர்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும்.