21.4.24 முதல் 27.4.24 வரை
சுப காரியங்கள் திட்டமிட்டபடி நடக்கும். வாகனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பா். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கூறிய பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல்திறன் அதிகரிக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த கவலைகள் நீங்கும். கலைத்துறையினர் உற்சாகமாக இருப்பர். மாணவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.
பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும்.