30.6.24 முதல் 6.7.24 வரை
எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். உங்களது எண்ணப்படியே அனைத்தும் நடைபெறும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவர். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக பொழுதை கழிப்பீர்கள். பெண்களுக்கு எண்ணப்படி காரியங்களை செய்து முடிக்க சூழ்நிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு செலவுகளை குறைக்க திட்டமிடுவது நல்லது. அரசியல்துறையினருக்கு கவுரவம் உயரும். மாணவர்களுக்கு திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: வாராகியை தீபம் ஏற்றி வணங்கி வர சிக்கலான பிரச்னைகளும் எளிதாக தீரும்.