11.6.2026 முதல் 17.6.2026 வரை
எந்த சூழ்நிலையிலும் தன் தைரியத்தை இழக்காத ஒன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: சிவபெருமானையும், நந்தியையும் வணங்க எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப பிரச்னை தீரும்.


