19.6.2025 முதல் 25.6.2025 வரை
இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். வீடு – மனை – வாகனம் விஷயங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்துறையினருக்கு நற்பலன்கள் கிடைத்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணக்கஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.