3.9.2026 முதல் 9.9.2026 வரை
உழைப்பை மட்டுமே நம்பி வாழும் ஒன்பதாம் எண் அன்பர்களே! இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் நீண்டநாட்களாக இருக்கும் பிரச்னை தீரும். சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகமான லாபம் தரும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருக்கும். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மன மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு தங்களது நண்பர்கள் மூலமாக நடக்க வேண்டிய நேரத்தில் சரியான நேரத்தில் நடக்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: முருகனை தரிசித்து விட்டு வாருங்கள்.


