12.6.2025 முதல் 18.6.2025 வரை
வரவுக்கேற்ற செலவு செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும்.தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் உருவாகலாம். பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். அரசியல்வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம்.
பரிகாரம்: திருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.