4.6.2026 முதல் 10.6.2026 வரை
அடுத்தவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்றாற்போல் பழகும் தன்மை உடைய ஆறாம் எண் வாசகர்களே, அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்யம் கெடலாம், கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்திலும் தயக்கம் இல்லாமல் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் நினைத்தபடி மேற்படிப்பை தொடர முடியும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
பரிகாரம்: சிவன் ஆலயத்திற்குச் சென்று அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டு வரவும்.


