19.6.2025 முதல் 25.6.2025 வரை
இந்த வாரம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் நல்லநிலைக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையை செய்து முடித்து நன்மை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு கூடும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். கலைத்துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். அரசியல்துறையினர் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு படிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.