11.6.2026 முதல் 17.6.2026 வரை
திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்காத எட்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் உங்கள் வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. மாணவர்களுக்கு எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும்.
பரிகாரம்: சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைக்க மனக்கஷ்டம், பணக்கஷ்டம் நீங்கும்.


