2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் பலவகையிலும் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் உயர்வுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்துறையினருக்கு எடுக்கக்கூடிய ஒப்பந்ங்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.
பரிகாரம்: ராகு காலத்தில் சரபேஸ் வரரை வணங்க காரிய தடை நீங்கும்.