2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். அரசியல்துறையினருக்கு எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். மாணவர்களுக்கு கல்விநிலை உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: பைரவரை தரிசித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.