2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு செயல்திறமை கூடும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். பெண்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்த்து தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும். மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: நவகிரகத்தில் குருவிற்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.