2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் முடிவில் எதிர்பார்த்தபடி காரியம் முடியும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கலைத்துறையினருக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். உடன் இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் நேரடியாக கவனம் செலுத்துவது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும்.