2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் எதிர்பார்த்த வெற்றி தாமாக கிடைக்கும். வியாபாரம், தொழில் மூலம் உண்டாகும் செலவுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். பெண்களுக்கு எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு இருந்த பிரச்னை குறையும். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கலாம். மாணவர்களுக்கு கல்விக்கான சுபச்செலவு உண்டாகும்.
பரிகாரம்: பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.