2.5.2024 முதல் 8.5.2024 வரை
இந்த வாரம் மனதில் புதுத்திட்டங்கள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். தொழில்,வியாபாரம் தொடர்பாக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பெண்களுக்கு கடன் பிரச்னைகள் குறையும். கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும்.
பரிகாரம்: முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வணங்க கஷ்டங்கள் தீரும்.