28.4.24 முதல் 4.5.24 வரை
எதையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். பூமி, வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். கோபம், படபடப்பு குறையும்.எதிர்பாராத செலவு உண்டாகலாம். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் நீங்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது துரிதமாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு இனிமையான செய்திகள் வந்து சேரும். வேலையை மனதிற்கு பிடித்து செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள். பெண்கள் எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் அகலும். சுபச்செலவு கூடும். மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது.
பரிகாரம்: முருக பெருமானை வணங்க எல்லா வற்றிலும் நன்மை உண்டாகும்.