01-01-2025 முதல் 31-12-2025 வரை
(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)
அறிவில் சிறந்த ஆளுமை கொண்ட தனுசு ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். 14-4-2025 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6ல் சஞ்சரிப்பதால் எதிரிகளால் பிரச்னை, கடன் பிரச்னை வந்து நீங்கும். 14-4-2025 க்கு பிறகு பொருளாதார நிலை உயரும் இதுவரை தடைபட்டு வந்த திருமணம், குழந்தை பாக்கியம், உண்டாகும். 29-3-2025வரை சனி பகவான் 3ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும், எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். 29-3-2025 க்கு பிறகு சனி பகவான் 4ல் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் தாய் உடல்நிலையில் பாதிப்பு, தாய் மற்றும் உறவுகளால் பிரச்னை, வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும். 18- 5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 4-10ல் இருப்பதால் தொழில் உத்யோகத்தில் கவனம் தேவை. மனம் அமைதியற்ற சூழல் வந்து நீங்கும். 18-5-2025க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 3-9ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும், எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும், அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார முயற்சிகள் கை கூடும். உங்கள் நிறுவனம் பிரபலமடையும்.உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு தேடி வரும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். நினைவாற்றல் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள்.அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலமும்,சூழ்நிலையை புரிந்து கொண்டு நடப்பதன் மூலமும் காரிய அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்: தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவரை தேய்பிறை அஷ்டமியில் சென்று வழிபட்டு வர பொருளாதார சிக்கல்கள் தீரும்.