16.5.2024 முதல் 22.5.2024 வரை
இந்த வாரம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோ தைரியம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை.
பரிகாரம்: அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்னைகள் அகலும்.