அரசியல் வல்லமை பொருந்திய சிம்ம ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களது தன்னம்பிக்கையும், தைரியமும் எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஆற்றலும் உங்களை வழிநடத்தும். எதிலும் நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. 21-4- 2023 எதிலும் நிதானம் தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். 21-4- 2023 க்கு பிறகு தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பிதுர்வழி சொத்து ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள்.17-1-2023 வரை எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. எதிரிகள் விலகிச் செல்வார்கள். வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து செல்வாக்கு உயரும். பொருளாதார நிலையில் மேம்பாடு அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். 17-1-2023 க்கு பிறகு எதிலும் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தம்பதிகளுக்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வர வாய்ப்புள்ளதால் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.30-10-2023 வரை தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் அதிகரிக்கும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். மனோபலம் அதிகரிக்கும். எதிலும் தைரியமுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். 30-10-2023 க்கு பிறகு பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலை ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்துறையினருக்கு எந்த காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை. உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.பரிகாரம்: மயிலாப்பூர் கற்பகாம்பாளை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்….
785