(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)
நல்லவனுக்கு நல்லவனாகவும் வல்லவனுக்கு வல்லவனாகவும் விளங்கும் ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5 ல் இருப்பதால் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இனிதே முடியும். தெய்வ அனுகூலம் உண்டாகும்.குரு பகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். கல்யாணம் முயற்சிகள் பலிதம் ஆகும். பூர்வீக சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். 30-10- 2023 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 4,10 ல் சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தொழில் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். சிலருக்கு இட மாற்றம் ஏற்படும். சனி பகவான் உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் மனோ பலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும்.அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு விருது பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.