(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)குடும்பம்: வரவும் – செலவும் சமமாகவே இருக்கும். சேமிப்பிற்கு சாத்தியக்கூறு கிடையாது. ஆனி மற்றும் ஆடி மாதங்களில் மட்டும் பணப்பற்றாக்குறை ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். களத்திர ஸ்தானமாகிய மேஷத்தில் பலம் வாய்ந்த ராகு நிற்பதால், மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சிறு அலட்சியமும், பெரும் சோகத்தில் முடியக்கூடும். மனித வாழ்க்கையில் மிக முக்கியமான சோதனைக் காலங்களில், தக்க வழிகாட்டி, உதவுகிறது. வேதத்தின் அங்கமாகப் பூஜிக்கப் படும் “ஜோதிடம்” எனும் தெய்வீகக் கலை! திருமண முயற்சிகள் கைகூடும். அர்த்தாஷ்டக சனியினால், அதிக அலைச்சலும், சில தருணங்களில் உடற் சோர்வும் ஏற்படும். கூடியவரையில், வெளியூர்ப் பயணங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள். கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.உத்தியோகம்: அர்த்தாஷ்டகத்தில் சனி இருப்பினும், அதிகப் பிரச்னைகளை உண்டுபண்ண மாட்டார். ஏனெனில், துலாம் அவரது திருவுள்ளத்திற்கு மிகவும் பிடித்த ராசியாகும். துலாம் ராசிக்கு சனி பகவானின் சலுகைகள் எப்போதும் உண்டு என “ஜோதிட அலங்காரம்”. “காலப்ரகாசிகா” ஆகிய பிரசித்திப் பெற்ற ஜோதிட நூல்கள் கூறுகின்றன, அது உண்மையே!!மேலதிகாரிகளுடன் வாக்கு வாதத்தைத் தவிர்க்கவும். சில தருணங்களில் அவர்கள் நியாயமில்லாமல் நடந்துகொள்வார்கள். கிரகநிலைகளின்படி, அத்தகைய தருணங்களில் உணர்ச்சிவசப்பட்டு நிதானத்தை இழந்துவிடாதீர்கள்! உத்தியோகத்தைக் குறிக்கும் கடக ராசிக்கு, மீனத்திலுள்ள சுபப் பார்வை கிடைப்பதால், அலுவலகத்தில் ஏற்படும் எந்தப் பிரச்னையானாலும், அதன் விளைவு தீவிரமாக இராது. குருப் பார்வை, எத்தகைய கொடிய தோஷமானாலும் போக்கிவிடும் சக்திவாய்ந்தது. தொழில், வியாபாரம்: போட்டிகள் நீடித்தாலும், லாபம் பாதிக்கப்படாமல் ஒரே சீராக இருக்கும். இருந்தாலும், புதிய முயற்சிகள், புதிய முதலீடுகளில் இந்த ஆண்டு ஈடுபடவேண்டாம். தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால், விற்பனையும் லாபமும் ஓரளவு திருப்திகரமாகவே இருக்கும். விஸ்தரிப்புத் திட்டங்களையும் இப்புத்தாண்டில் தவிர்ப்பது அவசியம். தொழில் துறை அன்பர்கள், உற்பத்தியை அளவோடு நிறுத்திக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்! கலைத்துறையினர்: சிறு, சிறு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துலாம் ராசி தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் இப்புத்தாண்டு லாபகரமான ஆண்டாக இருக்காது. நிதிநிறுவனங்களும் ஒத்துழைக்க மறுக்கும். உள்ளதைக் கொண்டு திருப்தியடையவேண்டிய ஆண்டு இந்த சுபகிருது!அரசியல்துறையினர்: சுக்கிரன் ஓரளவு சுப பலம் பெற்றுள்ளதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் உயரும். எதிர்க்கட்சியினருடன் நெருங்கிப் பழக வேண்டாம். கட்சி மேலிடத்திற்கு உங்களைப் பற்றிய தவறான செய்திகள் சென்றுகொண்டிருப்பதை கிரகநிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. கட்சியில் எவரையும் நம்பிவிடவேண்டாம். வெளுத்ததெல்லாம் பால் என வெள்ளையுள்ளம் படைத்த துலாம் ராசியினரை எளிதில் ஏமாற்றிவிடலாம்! இது அவர்களது பிறவிப் பலகீனம்!! வரும் ஒரு வருடக் காலத்திற்கு, பேச்சிலும், செயலிலும், பிறருடன் பழகுவதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.மாணவ – மாணவியர்: மனதில் பலவித சபலங்கள் கூடா நட்பு ஆகியவற்றிற்கு சாத்தியக்கூறு உள்ளதை கிரகநிலைகள் உணர்த்துகின்றன. இவை உங்கள் கல்வி முன்னேற்றத்தைப் பாதிக்கும். பரிகாரம் அவசியம். பிற மாணவ – மாணவியருடன் நெருங்கிப் பழக வேண்டாம்.விவசாயத் துறையினர்: புதனின் கருணையினால் தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. ஆயினும், உழைப்பிற்கேற்ற விளைச்சல் கிடைக்காதது ஏமாற்றத்தைத் தரும். அரசாங்க உதவிகள் தடைபடும். கால்நடைகளின் ஆரோக்கியக் குறைவினால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.பெண்மணிகள்: வருமானத்திற்குள் குடும்ப நிர்வாகத்தை நடத்துவது சற்றுக் கடினமாக இருக்கும். அடிக்கடி ஏதாவதொரு உடலுபாதை ஏற்பட்டு மனதில் சோர்வை உண்டாக்கும். எளிய மருந்துகளினால் குணம் கிட்டும். அதிக உழைப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள்.அறிவுரை: சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும். வருட ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு செலவு செய்தால், ஆனி, ஆடி ஆகிய இருமாதங்களிலும் சிரமப்படாமலிருக்கலாம்.பரிகாரம்: 1. தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தம் ஆகியவற்றில் உங்கள் மனம் எவற்றில் பக்தியுடன் படிக்கிறதோ, அவற்றை தினமும் காலை – மாலை இருவேளைகளிலும் படித்து வருவது நல்ல பலனை அளிக்கும்.2. பெண்மணிகள் தினமும் “அஸ்மின் பராத்மின்” எனும் நாராயணீயம் ஸ்லோகத்தை 24 அல்லது 48 தடவைகள் சொல்லி வந்தால் எத்தகைய கிரக தோஷமானாலும் பறந்தோடிவிடும். காஞ்சி மகா பெரியவாள் ஏராளமான பக்தர்களுக்கு உபதேசித்த அற்புத சக்திவாய்ந்த ஸ்லோகம் இது!3. தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், மறைந்த முன்னோர்களையும் (பித்ருக்கள்) பூஜித்து வருவது மேலும் பல நன்மைகளை அளிக்க வல்லது. 2. ஒவ்வொரு நாளும் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்கு தவறாமல் சென்று, வார தினங்களில் நெய் தீபமும், சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபமும் ஏற்றிவருவது உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் அளவற்ற நன்மைகளை அளிக்கும்.3. தினமும் காலை மாலை இருவேளைகளிலும் ஸ்ரீ தன்வந்திரி ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள். 4.சென்னிமலை ஸ்ரீ முருகன் தரிசனம் உடனுக்குடன் பலனளிக்கும். 5. தினமும் காலை மாலை இருவேளைகளிலும் 108 அல்லது 1008 ராமநாம ஜெபம் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். 6. மாலையில் கை, கால்களை சுத்தம் செய்துகொண்டு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீ அனுமான் சாலிஸா, ஸ்ரீ சௌந்தர்ய லஹரி, ஸ்ரீ மீனாட்சி பஞ்ச ரத்தினம், ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம்,ஸ்ரீ அபிராமி அந்தாதி ஆகியவற்றில் எவை முடிகிறதோ அவற்றை தினமும் சொல்லி வருவது கைமேல் பலனளிக்கும் பரிகாரங்களாகும்.7. கோவை, பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி ஸ்ரீ மாரியம்மனின் அற்புத தரிசனம்.8. இடுகம்பாளையம் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி திவ்ய தரிசனம். …
302