01-01-2025 முதல் 31-12-2025 வரை
(சித்திரை 3,4 பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ம் பாதம்)
தடம் மாறாமல் தனித்து செயல்படும் துலா ராசி அன்பர்களே,இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.14-4-2025 வரை குரு பகவான் 8 ல் சஞ்சரிப்பதால், எதிலும் தடை தாமதம், தீராத பிரச்னை வந்து நீங்கும். 14-4-2025 க்குப் பிறகு குரு பகவான் 9ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். தந்தையால் அனுகூலம் உண்டு. 29-3-2025 வரை சனிபகவான் 5ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நிலையில் பாதிப்பு, மனக்குழப்பம் வந்து நீங்கும். 29-3-2025 க்கு பிறகு சனி பகவான் 6 ல் சஞ்சரிப்பதால் வழக்கு விஷயங்கள் சாதகமாக மாறும். அரசால் அனுகூலம் உண்டு. பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் பிரபலமாக கூடிய சூழல் உருவாகும்.18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 6- 12 ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, எதிரிகளை வெல்லும் ஆற்றல்உண்டாகும். 18- 5- 2025 க்கு பிறகு 5-11 ல் ராகு கேது முறையே சஞ்சரிப்பதால் பொருளாதாரம் நிலையில் உயர்வு ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும்.உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு தேடி வரும்.மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள்.அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினருக்கு காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். சிந்தித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வணங்க தடைபட்ட காரியங்கள் நடக்கும்.