மீனம்

Published: Last Updated on

(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எந்த சூழ்நிலையையும் எளிதாக கையாளும் மீனராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகியே செவ்வாய் பகவான் 4 ல் சஞ்சரிப்பதால் தெய்வ அனுகூலம் உண்டு. மூத்தோர் மற்றும் குருவின் ஆசி கிடைக்கும். உற்ற நேரத்தில் தேவையான உதவிகள் உங்களுக்கு கிடைக்கும்.குரு பகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் தற்போது வந்து சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு.30-10- 2023 வரை ராகு கேது பகவான் முறையே 1,7 ல் சஞ்சரிப்பதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு இடம் மாற்றம் ஏற்படலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும். தேவையற்ற சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். கடின உழைப்பு மேன்மை தரும்.கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புது முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணிகளில் அதிக கவனமுடன் செயல்படுங்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் அதீத நம்பிக்கையை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us