மிதுனம்

Published: Last Updated on

16.5.2024 முதல் 22.5.2024 வரை

சாதகங்கள்: ராசிநாதன் புதன் லாப ஸ்தானத்தில் சுக்கிரனோடு இணைந்து இருப்பது நல்ல அமைப்பு. புத்திக்கூர்மையோடு செயல்படுவீர்கள். புதிய ஆடை ஆபரணங்களை வாங்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. பாக்கிய ஸ்தானத்தில் சனி இருப்பதால் எப்படியாவது தொழிலை முன்னேற்ற வேண்டும். நிரந்தரமானவருமானத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டங்களுக்கான வழிகள் பிறக்கும். ராகு – செவ்வாய் இணைந்திருப்பதால் ரியல் எஸ்டேட் முதலிய தொழில் வளர்ச்சி நோக்கி திரும்பும் என்றாலும் அதில் எச்சரிக்கை அவசியம். புதிய கட்டடங்களில் தொழில் மாற்றம் நடைபெறும் வாய்ப்பு உண்டு. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் திருமணம் முதலிய சுப காரியங்களுக்கு ஏற்ற நேரம்.

கவனம் தேவை: உடலில் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்த பிரச்னைகள் சற்று அதிகரிக்கலாம். காரணம் குரு பன்னிரண்டில் இருக்கிறார். நான்கில் கேது இருப்பதால் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் மிகுந்த
கவனம் தேவை. காரணம் கேதுவை செவ்வாயும் ராகுவும் பார்க்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அண்ணன் தம்பி உறவுகளில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

பரிகாரம்: அம்பிகையை வழிபட நம்பிக்கை பிறக்கும். வாரந்தோறும் சனிக்கிழமை பைரவருக்கு தீபம் ஏற்றுங்கள். அனைத்தும் நலமாகும்.

Dinakaran- astrology-logo

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Download Our Apps

Follow Us