(5.2.2026 முதல் 11.2.2026 வரை)
சாதகங்கள்: வாரத்தின் முற்பகுதி வரை ராசிநாதன் சுக்கிரன் 4ம் இடத்தில் இருக்கிறார். அந்த இடத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்திருப்பது யோகமான பலன்களை தரும். குருவின் ஐந்தாம் பார்வை ராசியில் விழுவதால் ராசி பலம் பெறுகிறது. உடன்பிறப்புகளுக்கு யோகமான காலம். எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் அகன்று தைரியம் பிறக்கும். வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் இருந்த சீர்கேடுகள் அகலும். வருமானம் போதுமான அளவுக்கு இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியைத் தரும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். சனி கிட்டத்தட்ட ஆறாம் இடத்தை நெருங்குகிறார். சுப பலன்கள் அதிகரிக்கும். சுப காரியத் தடைகள் விலகும்.
கவனம் தேவை: சிலருக்கு உத்தியோக ரீதியான இடமாற்றம் உண்டு. வேலை விஷயமாக வெளிநாடு செல்லும் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். கமிஷன் ஏஜெண்டுகள் இடைத்தரகர்கள் இவர்களால் ஏமாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகள் இப்போதைக்கு வேண்டாம். யாரிடமும் விரோதம் பாராட்ட வேண்டாம்.
பரிகாரம்: வராகி அம்மனை வழிபடுங்கள்.


