(10.7.2025 முதல் 16.7.2025 வரை)
சாதகங்கள்: ஐந்தாம் இடம், ஏழாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடம் குரு பார்வையால் வலுப்படுகிறது. திரிகோண ஸ்தானங்கள் வலிமையாக இருப்பதால் நன்மைகள் அதிகரிக்கும். புதன் இரண்டாம் இடத்தில் இருப்பதால், பொருளாதாரம் லாபகரமாக இருக்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். மேற்படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் வெற்றி கரமாகும். முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், எதையும் தைரியத்தோடு செய்யும் ஆற்றல் உண்டு.
கவனம் தேவை: ராசியில் சூரியபகவான் இருப்பதால், உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும். சனி வக்கிரமாக இருப்பதால், தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டுப் பகையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 11.7.2025 முற்பகல் 12.09 முதல் 13.7.2025 மாலை 6.53 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். சனிக் கிழமை தோறும் பூஜை அறையில் நல்லெண்ணெய் போட்டு ஒரு அகல் விளக்கு ஏற்றி வாருங்கள்.