search-icon-img
featured-img

தனுசு

Published :

(4.6.2026 முதல் 10.6.2026 வரை)

சாதகங்கள்: குரு அஷ்டமத்தில் மறைந்தாலும் கூட அவர் உச்சம் பெற்று இருக்கிறார். எனவே, நேரடியான நன்மைகளைச் செய்யாவிட்டாலும் மறை முகமான நன்மைகளைச் செய்வார். ஆனால், சிறிய தடைகளை உணரும் படியாக இருக்கும். அவருடைய பார்வை இரண்டாம் இடத்திலும் நான்காம் இடத்திலும் விழுவதால் தனபாக்கியங்களில் குறைவிருக்காது. ஏழில் சுக்கிரனும் புதனும் இணைந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் புத்திக் கூர்மையுடன் காரியத்தைச் செய்வீர்கள். இல்லறத்தில் கருத்து வேறுபாடு வந்தாலும் உடனடியாக நீக்கிக் கொள்ளும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் பலன் உண்டு, வியாபார நெருக்கடிகள் தீர்ந்து, தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

கவனம் தேவை: லக்னாதிபதி எட்டில் மறைவதால் உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். நோய்களை கவனிக்காவிட்டால் அவைகள் வளர்ந்து அதிக செலவோடு கூடிய மருத்துவத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வரலாம். மனதில் கலக்கமும். தெளிவின்மையும் ஏற்படலாம். எதிர்பாராத சிக்கல்களும் சோதனைகளும் வரும் நேரம் என்பதால் ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு முறைக்கு இருமுறை கவனமாக ஆலோசித்துச் செய்யவும்.

பரிகாரம்: ஆஞ்சநேய மகாபிரபுவையும் ராமரையும் சரணடையுங்கள்.