(12.6.2025 முதல் 18.6.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு 2, 5க்கு உரிய புதன் 2ல் ஆட்சி பெற்று இருக்கிறார். குரு தொழில் ஸ்தானத்தைப் பார்வை இடுகின்றார். இரண்டில் குரு இருப்பது நல்ல அமைப்புதான். சிரமங்கள் குறையும். வலிகள் குறையும். பொருள் வரத்து அதிகரிக்கும். இதுவரை இருந்த செயல் தடைகள் மாறும். நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொழில் நல்லவிதமாகவே நடைபெறும். 12ல் சுக்கிரன் இருப்பது குறித்து கவலை வேண்டாம். அது அவருக்கு மறைவு ஸ்தானம் அல்ல. மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கவனம் தேவை: நான்கில் செவ்வாய், கேது இணைந்து இருக்கின்றார்கள். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. சொத்துக்களில் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கும்போதும் விற்கும் போதும் கவனமாக இருங்கள். செவ்வாய் சனி பார்வை தொடர்பு கடைசி நேரத்தில் உங்கள் சிந்தனையை மாற்றி தவறாக முடிவெடுக்க வைத்துவிடும். உங்கள் நினைப்புக்கு மாறாக செயல்கள் நடக்கும்.பெற்றோர்களுடன் மன வருத்தம் ஏற்படலாம். வீடு மாற்றம் இடமாற்றம் உண்டு.
சந்திராஷ்டமம்: 11.6.2025 இரவு 8.10 முதல் 14.6.2025 காலை 5.38 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் கோயிலுக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும் நன்மைகள் நடக்கும்.