
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
குடும்பம்: இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்துவந்த ராகு, விரய ஸ்தானத்திற்கு மாறியிருப்பது மிகவும் அனுகூலமான கிரக மாறுதலாகும். கோள்சார விதிகளின்படி, ராகு விரய ஸ்தானத்தில் நிலைகொண்டிருப்பதும், நன்மை தராது என்றாலும், ஜென்ம ராசி தோஷத்தைவிட, விரய ஸ்தான தோஷம் மிகவும் குறைவானதே! முக்கியமாக, ஜென்ம ராசி சஞ்சாரக் காலத்தில் பலவித உடல் உபாதைகளையும், உடல் ஆரோக்கியக் குறைவையும் ஏற்படுத்தியிருப்பார். வீண் அலைச்சல், பண விரயம், அமைதியின்மை ஆகியவை ஜென்ம ராசி ராகு விளைவிக்கும் துன்பங்களில் சிலவாகும். அவையனைத்தும் இனி, படிப்படியாகக் குறைவதைக் காணலாம். திருமண முயற்சிகளில், மனக் குழப்பத்தையும், தவறான வரனை நிச்சயித்துவிடும் வாய்ப்பினையும் உருவாக்குவார், ராகு! அவை அனைத்தும் இனி அடியோடு தீரும். வீண் அலைச்சல்கள் குறையும். எப்பொழுது பார்த்தாலும், மனதில் நிலவிய “டென்ஷன்” இனி இராது. ராகு அனுகூலமாக மாறியுள்ள நிலையில், கேது, கன்னி ராசியில் பிரவேசித்திருப்பதும் நற்பலன்களையே தரும். பல கவலைகள் குறையும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த வீண் செலவுகள் இனி இராது. குறிப்பாக, வைத்தியச் செலவுகள் இதுவரை இருந்துவந்த அளவிற்கு இராது. கேது, கன்னி ராசிக்கு மாறுதலும் பல நன்மை களை உங்களுக்கு வாரி வழங்கவுள்ளது, அடுத்துவரும் பல மாதங்களிலும்! கன்னி ராசி, மேஷ ராசி அன்பர்களுக்கு ருண (கடன் – பொருளாதாரப் பிரச்னைகள்), ரோகம் (வியாதி-உடல் உபாதைகள்), சத்துரு (எதிரி)ஸ்தானமாகும். அங்கு கேது அமர்்ந்திருப்பது, விசேஷ நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய கிரக நிலையாகும். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள பணக் கஷ்டம் விலகும். முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். உடல் உபாதைகள் நீங்கும். நீண்டகாலமாக வயோதிகம் காரணமாகவும், இதர காரணங்களினாலும், உடல் நிலை பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குக்கூட, பிரமிக்கத் தக்க குணத்தை அளித்தருள்வார், கேது! கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து, நிம்மதி பெற வழிவகுக்கும். குடும்ப உறவினர்களிடையே ஒற்றுமை ஓங்கும். சுப நிகழ்ச்சிகள் நிகழும்.
உத்தியோகம்: பலனுக்கும், பரிகாரத்திற்கும் ராகுவை, சனியாகக் கருதி, கணித்துப் பார்க்கவேண்டுமென்பது மகரிஷிகளின் வாக்காகும். ராகுவிற்கும், உத்தியோகத் துறைக்கும் நெருங்கிய உறவுண்டு. ராசியில் இருந்தபோது, உத்தியோகத்தில் சென்ற ஒரு வருடத்திற்கும் மேலாக நிம்மதியற்று இருந்த நிலை, இனி படிப்படியாக மாறும். உங்களைக் கண்டாலேேய, வெறுப்பை உமிழந்த மேலதிகாரி ஒருவரின் இடமாற்றம் அல்லது இலாகா மாற்றம் செய்யப்படுவார். அந்த இடத்திற்குப் புதிதாக வந்துள்ள உயரதிகாரி, உங்களிடம் நியாயமாக நடந்துகொள்வார். அதுவே உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். பணிகளில் உற்சாகமும், ஊக்கமும் மேலிடும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், ஊதியம் உயர்தல், பதவியுயர்வை எதிர்பார்க்கலாம். முக்கியமாக, வெளிநாடுகளில் சென்று பணியாற்றும் ஆர்வம் இருப்பின், அதற்கேற்ற நல்ல தருணம் இது. கேதுவினாலும் நன்மைகள் ஏற்படும்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையின் மீதும் ராகுவிற்கு அதிகாரம் உள்ளது என்பதைப் புராதன ஜோதிட நூல்கள் விவரித்துள்ளன. எத்தகைய கடினமான போட்டிகளேயானாலும், அவற்றைத் திறமையுடன் முறியடித்து, வெற்றி பெறும் ஆற்றலைக் குறைவின்றி அளித்தருள்வார், ராகு! வியாபாரத் தந்திரங்களையும், புதிய யுக்திகளையும் தக்க தருணங்களில் எடுத்துக்காட்டி உதவிபுரிவதில் ராகுவிற்கு நிகர் அவரே!!
கலைத் துறையினர்: கலைத் துறையினருக்கும் ராகுவின் மீன ராசி சஞ்சாரக் காலம் சிறந்த முன்னேற்றத்தை அளிக்கவுள்ளது. விசேஷமாக, திரைப்படத் துறையினர் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியுறச் செய்வார். திரைப்படத் துறையில் முன்னேற்றம் அடைவதற்கென்று, சில பிரத்தியேக அம்சங்கள் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். அழகு, கவர்ச்சி, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்வது, துணிவு, சமயோசித அறிவுத் திறன் ஆகியவற்றை அளிக்கும் சக்தி பெற்றவர், ராகு! அவற்றை, உங்களுக்கு, அவர் தற்போது குறைவில்லாது தந்தருள்வார். வருமானம் கூடும்.
அரசியல் துறையினர்: “அரசியலில் வெற்றி பெற எதையும் செய்யலாம்…! இலக்கு மட்டுமே குறி!! அதை அடைவதற்கான வழிமுறைகள் நியாயமானதாகத் தான் இருந்தாகவேண்டும் என்ற அவசியமில்லை….! ” என்பதை அன்றே சாணக்கியர் கூறிய “அரசியல் அறிவுரை” இது. ராகுவை மனதில் நினைத்தே அவர் இவ்வாறு கூறியிருக்க வேண்டும்! உங்கள் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய திருப்புமுனை ஒன்றை ஏற்படுத்தித் தருவார், இப்போது!!
விவசாயத் துறையினர்: பயிர்கள் செழித்து வளர்ந்து, நல்ல லாபத்தைப் பெற்றுத் தரும். பழைய கடன்கள் அடைபடும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், புதிய விளைநிலம் அமையும்.
மாணவ, மாணவியர்: உயர் கல்விக்கு உதவி பெற்றுத் தருவார், ராகு. கேது, நல்ல மாணவர்களின் நட்பை ஏற்படுத்தித் தருவார். நல்ல நண்பர்கள் கிடைப்பது தற்காலத்தில் மிக, மிகக் கடினம். சீரிய நட்பு கிடைத்தற்கரியது. பெரிய பாத்திரத்தில் உள்ள பாலில் ஒரு துளி விஷம் சேர்ந்தாலும், பால் ெகட்டுவிடும். நல்ல நண்பர்கள் கிைடப்பதற்கும், முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அது உங்களுக்குக் கிைடக்கும் இப்போது!
பெண்மணிகள்: உடல் உபாதைகள், மனதில் ஏற்படும் தவறான சபலங்கள் ஆகியவற்றை தடுத்து நிறுத்துவார், கேது!
அறிவுரை: ராகு – கேதுவினால் ஏற்படும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்கால நன்மைக்கு இப்போதே சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: ராகு-கேதுவுக்காக பரிகாரம் ஏதும் மேஷ ராசியினக்குச் செய்ய வேண்டியது இல்லை. இருப்பினும், நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, கீழ்ப்பெரும்பள்ளம், திருநாகேஸ்வரம், சென்று தரிசித்துவிட்டு வரலாம். திருத்தலங்களுக்குச் செல்லுங்கள், மறவாமல் நல்லெண்ணெய் எடுத்துச் செல்லுங்கள்!