
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குடும்பம்: அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பது அனுகூலத்தைத் தராது. இருப்பினும், ஜென்ம ராசிக்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பது, பசியினால் வருந்தும் ஒருவருக்கு, அமுதத்தையொத்த அறுசுவை உணவு கிடைத்தாற்போல, ராகு, ேகதுவின் தோஷங்களைக் குறைத்துவிடுகிறது. சிம்ம ராசிக்கு நாயகனான சூரியன், ராகு, கேதுக்களுக்குப் பகைக் கிரகங்களாவார்கள். மீனம், சிம்ம ராசிக்கு ஆயுள் ஸ்தானமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம். சிறு விஷயங்களுக்குக் கூட, அதிக பிரயாசையும், அலைச்சலும், பண விரயமும் ஏற்படும். சிறு உடல் உபாதையானாலும், மருத்துவரை அணுகி, யோசனை பெறுவது உங்கள் நன்மைக்கே! கேதுவின் நிலையினால், வரவிற்கு மீறிய செலவுகள் ஏற்படும். வாக்கு ஸ்தானத்தில் கேது நிற்பதால், உங்கள் சக்திக்கு மீறிய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அவற்றை நிறைவேற்ற முடியாமல் அவமானப்பட நேரிடும். கன்னியே தனஸ்தானமுமாக இருப்பதால், பணம் பல வழிகளிலும் விரயமாகும். சில தருணங்களில் கடன் வாங்கவும் நேரிடக்கூடும். திருமண முயற்சிகளில் சிறு, சிறு தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரையில், தரக்குறைவான உணவு வகைகளைத் தவிர்க்கவும் குடும்பத்தின் ஒற்றுமையும் பாதிக்கப்படக்கூடும்.
உத்தியோகம்: அஷ்டம ராகு சஞ்சார காலத்தில், அலுவலக ஊழியர்கள், உயர்மட்ட அதிகாரிகள், நண்பர்கள் ஆகிய அனைவரிடமும் அனுசரித்தும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொள்ள வேண்டும் என்கிறது, “ஜோதிட பாரிஜாதம்” எனும் அரிய ஜோதிடகிரந்தம் (சுவடிகள்)! புதிய வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசி அன்பர்கள் இடைத் தரகர்களிடம் ஏமாந்துவிட வேண்டாம் என ராகுவின் நிலையும், கேதுவினால் ஏற்படும் தோஷமும் எச்சரிக்கை செய்கின்றன. அன்றாடப் பணிகளிலும் அதிகக் கவனம் அவசியம்.
தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறையில் தலையிடும் உரிமையும், பெற்றுள்ளனர் ராகுவும், கேதுவும். போட்டிகள் அதிகரிக்கும். ஏற்றுமதித் துறையினருக்கு, வெளிநாடுகளிலிருந்து வரவேண்டிய பாக்கிகள், அதிகமாகும். புதிய முதலீடுகளில் பணத்தை இழப்பதற்கு சாத்தியக்கூறு உள்ளதை ராகு, கேது ஆகிய இருவரின் சஞ்சார நிலைகளும் தெளிவாகக் காட்டுகின்றன. சக வியாபாரிகளுடன் பகையுணர்ச்சி மேலிடும். வெளியூர்ப் பயணங்களின்போது, உடல்நலன் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் உள்ளன.
கலைத்துறையினர்: இந்த ராகு, கேது பெயர்ச்சியினால், நன்மை எதையும் சிம்ம ராசி அன்பர்கள் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையே அளிக்கும். வருமானம் குறையும். சில தருணங்களில் கடன் வாங்க நேரிடும். வேலையாட்களினால் ெதால்லைகள் ஏற்பட்டு, மன அமைதி குறையும். கேதுவின் நிலையினால், செலவுகளும், பண விரயமும் அதிகமாகும். பூர்வீகச் சொத்து, கைவிட்டுப் போகும். சிக்கனமாக இருந்தால், சிரமங்கள் குறையும். மனக் கவலையும் மறையும்.
அரசியல் துறையினர்: அஷ்டம ராகுவின் தோஷம் சற்றுக் கடுமையானதே! முக்கிய விஷயங்களில் தீர ஆழ்ந்து சிந்தித்து, முடிவெடுப்பது மிகவும் அவசியம். ராகு, மனதில் சபலங்களை ஏற்படுத்துவார். கேதுவும் சரியில்லை. கூடியவரையில், பொதுக்கூட்டங்களில் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்! வாக்கு ஸ்தானத்தில் உள்ள கேது, உணர்ச்சி மேலிடுவதாலும், கூட்டத்தைப் பார்த்த உற்சாகத்திலும் தவறான கருத்துக்களைக் கூறி, அதன் பின்விளைவுகள் உங்கள் அரசியல் எதிர்காலத்தைக் கடுமையாக பாதித்துவிடக்கூடும்.
விவசாயத் துறையினர்: வயலில் உழைப்பு கடினமாகும். கால்நடைகள் நோய்களினால், பாதிக்கப்பட்டு, வைத்திய செலவுகள் அதிகமாகும். விளைச்சல் ஓரளவு நல்லபடி இருக்கும்.
மாணவ, மாணவியர்: இரவில் நெடுநேரம் கண்விழித்துப் படிக்க வேண்டாம். கண்ட சக மாணவர்களுடனும் நெருங்கிப் பழக வேண்டாம். உங்கள் கல்வி முன்னேற்றம் பாதித்துவிடக்கூடும். ஒரு சிறு தவறும் உங்கள் எதிர்காலத்தை மட்டுமல்லாது உங்கள் பெற்றோரின் கனவுக் கோட்டையையும் சிதைத்துவிடும்.
பெண்மணிகள்: அதிக உழைப்பு வேண்டாம். கிடைத்தபோது ஓய்வெடுத்துக் கொள்வது, உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தோர்க்கும் நலன் பயக்கும். அண்டை வீட்டாருடன் வாக்குவாதம் தவிர்க்கவும்.
அறிவுரை: பிறருடன் நெருங்கிப் பழக வேண்டாம். சிக்கனமாக செலவு செய்யவும்.
பரிகாரம்: சூரியனார்க் கோயில் தரிசனம், ராகு – கேது தோஷங்களைப் போக்கும். கண்டிப்பாகச் சென்று தரிசித்துவிட்டு வாருங்கள். திருக்கோயிலுக்குச் செல்லும்போது, திரி,
மண் அகல் விளக்கு, நெய், தீப்பெட்டிகளை எடுத்துக் செல்ல மறந்துவிடவேண்டாம்.