(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
குடும்பம்: துலாம் ராசிக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகிய மீன ராசிக்கு, ராகு மாறுவது பல நன்மைகளை அளிக்க வல்லது. ஆயினும், கேது விரய ஸ்தானமான கன்னி ராசிக்கு மாறுவது நன்மை தராது. ஆரோக்கியம் அபிவிருத்தியடையும். கடன்கள் அடைபட்டு, பொருளாதார நிலை சீர்படும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியளிக்கும். வருமானம் திருப்திகரமாக நீடிக்கும். திருமண முயற்சிகளில் உதவிக்கரம் நீட்டுவார், ராகு! கேதுவினால் குடும்பத்தில் எதிர்பாராத சுபச் செலவுகள் அதிகரிக்கும். சரும சம்பந்தமான பிரச்னைகள் ஏற்பட்டு, தக்க சிகிச்சையினால் குணமாகும். பாடல் பெற்ற திருத்தல தரிசனம் ஒன்றும் கிடைக்கும் – கேதுவினால்!! ஆன்மிகச் சிந்தனைகளும், தெய்வ பக்தியும் அதிகரிக்கும். ஜெனன கால தசா, புக்தியும் சாதகமாக இருந்து, ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமும் சுப பலம் பெற்றிருப்பின், கங்கா ஸ்நான பாக்கியமும், காசி, கங்கோத்ரி, யமுனோத்ரி ஸ்நான பாக்யமும், பத்ரிநாத், கேதார்நாத் தரிசனப் பேறும் கிட்டும் (ஆதாரம்: “பூர்வ புண்ணிய நிர்ணய ஸாரம்” எனும் மிகப் புராதன ஜோதிட நூல்). பழைய கடன்கள் அடைபடும்.கேதுவின் நிலையினால், சிறு
சிறு உடல் உபாதை கள் அசதியை ஏற்படுத்தும்.
உத்தியோகம்: வேலை பார்க்கும்், இடத்தில், நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுப்பார், ராகு. பணிகளில் திறமை அதிகரிக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுதல்கள் கிடைக்கும். ஊதிய உயர்வு, சலுகைகள் ஆகியவை கிடைக்க வழிவகுத்தருள்வார், ராகு! ஒருசிலருக்கு, இடமாற்றமும் பதவியுயர்வும் கிட்டும். வேலையில்லாமல் வருந்தும் துலாம் ராசியினருக்கு, எளிதில் நல்ல வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.
தொழில், வியாபாரம்: ராகுவின் நிலை மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. ஏற்கெனவேயே நாங்கள் குறிப்பிட்டுள்ளபடி, கொடுப்பதில் ராகு தன்னிகரற்றவராவார். தற்போது சிறந்த, சுப பலம் பெற்றுத் திகழ்வதால், நல்ல லாபத்தைப் பெற்றுத் தருவார். வியாபாரத்தை அபிவிருத்தி செய்ய அனைத்து உதவிகளையும் சற்று தாராளமாகவே தந்தருள்வார். புதிய விற்பனைக் கிளைகளைத் திறப்பதற்கும் வழிவகுத்துத் தருவார். சொந்தக் கட்டடத்திற்குத் தங்கள் அலுவலகத்தை மாற்றுவதற்கு ஏற்ற தருணம் இது. விரயத்தில் நிலைகொண்டுள்ள கேது, அலைச்சலைத் தந்தருள்வாரெனினும், அதற்கான லாபத்தையும் கொடுத்து உதவுவார். ஒரு சிலர் வியாபார அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று – வரும் வாய்ப்பினை, விரயத்திலுள்ள கேது ஏற்படுத்தித் தருவார். அதற்காக பணம் சற்று விரயமாகும்.
கலைத்துறையினர்: தனது மீன ராசி சஞ்சார காலத்தில், புதிய வாய்ப்புகள் கிடைக்கும்படிச் செய்வார், ராகு. வருமானமும் உயரும்; மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும், கேதுவின் நிலையினால், அடிக்கடி சோர்வும், அசதியும் மேலிடும். பரிகாரத்திற்குட்பட்ட தோஷம்தான், கேதுவினால் ஏற்படும் தோஷம்!
அரசியல் துறையினர்: கட்சியில் செல்வாக்கை அதிகரிக்கச் செய்வார், ராகு! பேச்சுத் திறமையினாலும், அரசியல் சாணக்கியத்தனத்தினாலும், வெகுஜனப் பிரியராக உருமாற்றம் பெருவீர்கள்!! கட்சியில், மேல்மட்டத் தலைவர்களின் அன்பையும், ஆதரவையும் மிக எளிதாகப் பெற்றுவிடுவீர்கள்! வரவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றிக் கனியை எளிதில் எட்டிப் பிடித்துவிடுவீர்கள்! சிலருக்குக் கட்சிமாற்றமும், அதனால் நல்ல வாய்ப்புகளும் கிட்டும். முக்கிய பதவியொன்று கிைடப்பதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை ராகுவின் நிலை உணர்த்துகிறது.
விவசாயத் துறையினர்: விளைச்சலும், வருமானமும் உழைப்பிற்கேற்றவாறு தந்தருள்வார், ராகு! தண்ணீர்ப் பற்றாக்குறையிராது. விவசாய இடுபொருட்களாகிய, தரமான விதைகள், உரம், களைக்கொல்லி மருந்துகளுக்குத் தட்டுப்பாடு இராது. எதிர்பாராத செலவுகளை ஏற்படுத்திவிடுவார், விரயத்தில் அமர்ந்துள்ள கேது!!
மாணவ, மாணவியர்: நேரடியாக (direct) ராகு – கேது, கல்வித் துறையைப் பாதிப்பதில்லை (ஆதாரம்: பிருஹத் ஸம்ஹிதை). வாழ்க்கையின் மற்ற முக்கிய அம்சங்கள் ராகு – கேதுவினால் பாதிக்கப்படும்போது, அவற்றின் பக்கவிளைவுகள் (side effects) மாணவ – மாணவியரின் நலன்களைப் பாதிக்கின்றன. உயர் கல்விக்குத் தேவையான நிதியுதவி கிடைக்க ஆதரவாகத் திகழ்கிறார், ராகு! கேது அதனை நல்வழியில் செலவு செய்ய வழிவகுப்பார்.
பெண்மணிகள்: தனது மீன ராசி சஞ்சார காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படச் செய்வார், ராகு! மூட்டு வலி, மாதவிடாய்ப் பிரச்னைகள், வயிற்று வலி, தலைச் சுற்றல் ஆகியவற்றைப் போக்குவதில் திறமை பெற்றவர், ராகு! (ஆதாரம்: மருத்துவ ஜோதிடம் – Medical Astrology). விரய ஸ்தான கேதுவினால் கைப்பணம் கரையும்.
அறிவுரை: சுப பலம் பெறும்போதெல்லாம் ராகு, சற்று தாராளமாகவே கொடுத்தருள்வார். அவற்றை வீணடிக்காமல், எதிர்காலத்திற்ெகன்று சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கேது விரயத்தில் கேது இருப்பதால், சற்று நிதானமாகச் செலவு செய்யுங்கள். அதிக உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: கேதுவிற்கு மட்டும் பரிகாரம் அவசியம். செவ்வாய்க் கிழமைகளில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் மாலையில் நெய் தீபம் ஒன்று ஏற்றிவந்தால் போதும். பலன் அளவற்றது. ராகுவிற்குப் பரிகாரம் அவசியமில்லை. இருப்பினும், சனிக்கிழமைகளில் அவருக்கென்று எள் எண்ணெய் தீபம் ஒன்று ஏற்றி வந்தால், அவரால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கும்,