17-9-24 முதல் 17-10-24 வரை
தன்னம்பிக்கையே வெற்றி தரும் என்பதை உணர்ந்து செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 7ல் புதனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால், எத்தனை பிரச்னைகள் தடைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப இருக்கும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் நன்மை உண்டு. தாயால் அனுகூலம் உண்டு. உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் பணவரவும் உண்டு. 8 ல் சுக். நீசம் பெறுவதால் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைகள் உண்டாகும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். இருப்பினும் தேவையற்ற வீண் செலவுகளை தவிர்க்க சேமிப்பில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம்.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 1, 2, 3
பரிகாரம்: கஞ்சனூர் அக்னீஸ்வரர் மற்றும் சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.