15-5-25 முதல் 14-6-25 வரை
எதிலும் பொறுமையாக சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 8 ல் வக்கிரம் பெற்று இருப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். செவ்வாய் நீச்சம் பெற்று இருப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. சனி 6 ல் இருப்பதால் குழந்தைகளை கவனமாக கையாளுங்கள். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். பூர்வீக சொத்து விஷயங்களை எச்சரிக்கை உடன் அணுகுங்கள். குலதெய்வ இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும்.வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். விடாமுயற்சி வெற்றி தரும். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 25, 26, 27.
பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை வழிபடுவதால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.