15-5-25 முதல் 14-6-25 வரை
அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்லும் ரிஷப ராசி அன்பர்களே குருபகவான் 2ல் சஞ்சரிப்பதால், பொருளாதார நிலையில் ஒரு நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். 3ல் செவ்வாய் இருப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லது. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். 5 ல் கேது இருப்பதால் குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. 6 ல் கேது இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். வழக்கு விஷயங்கள் சாதகமாக அமையும். செவ்வாய் நீச்சம் பெறுவதால் கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். வியாபார ரீதியான ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. தந்தை உடல் ஆரோக்கியம் மேம்படும். 10ல் சனி இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணிகளில் கால தாமதத்தை தவிருங்கள். எதிலும் சிரத்தையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
சந்திராஷ்டம நாட்கள்: மே 16, 17, 18 ஜூன் 12, 13, 14.
பரிகாரம்: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபட்டு வர எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.