
18-8-23 முதல் 17-9-23 வரை
சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை மாற்றிக் கொள்வீர்கள். ராசிநாதன் புதன் பகவான் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை கூடும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். 2 ல் சுக்கிரன் இருப்பதால் ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. சூரியன் செவ்வாய் புதன் 3 ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும்.உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. வீடு வாகன சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. யோகா தியானம் போன்ற பயிற்சிகளை செய்வதால் நினைவாற்றல் அதிகரிக்கும். 5 ல் கேது இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் அதிக கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். எதிரிகளால் வீண் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் விலகும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் வந்து நீங்கும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவர். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 28 29 30
பரிகாரம்: திருத்தணி முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் வணங்கி வர பொருளாதார நிலை உயரும்.