17-7-25 முதல் 16-8-25 வரை
தன்னுள் ஆயிரம் ரகசியங்களை உள்ளடக்கி இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசிக்கு 10ல் திக்பலம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஆளுமை திறன் அதிகரிக்கும். மற்றவர்களால் பாராட்டப்பட கூடிய சூழல் உருவாகும். இருப்பினும் பேச்சில் அதிக கவனம் தேவை. மனோ பலம் அதிகரிக்கும். ராகு 4ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. 5ல் சனி இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. மனக்குழப்பம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான ஒப்பந்தங்களால் நன்மை உண்டாகும்.சூரி புதன் 9ல் இருப்பதால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். கடின உழைப்பு வெற்றி தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 22, 23, 24.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபட எதிரிகள் பிரச்னை நீங்கும்.