
18-8-23 முதல் 17-9-23 வரை
ஆளுமைத் திறனும் அதிகாரத் தோரணையோடு செயல்படுவீர்கள். ராசிநாதன் செவ்வாய் பகவான் மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரித்தாலும், மாத பிற்பகுதியில் 9ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். சுக்கிரன் 4 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகன சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். சூரியன் 5 ல் இருப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்து விஷயங்கள் லாபகரமாக அமையும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். எதிரிகளால் வீண் பிரச்னைகள் இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும்.தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு உண்டு. உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 24 25 26
பரிகாரம்: குக்கே சுப்ரமணிய சுவாமியை செவ்வாய்கிழமை சென்று வழிபட மனக்குழப்பத்தையும், பிரச்னைகளையும் நீக்கும்.