
18-8-23 முதல் 17-9-23 வரை
எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். ராசிநாதன் சுக்கிர பகவான் 10 ல் சஞ்சரிப்பதால் ஆளுமை திறன் வெளிப்படும், எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும்.எதிர்மறை சிந்தனை எதிர்காலம் பற்றிய கவலையை தவிர்ப்பது நல்லது. யோகா தியானம் மன வலிமையை அதிகரிக்கும். செவ்வாய் 11 ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும்.சனி 5 ல் இருப்பதால் குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக புகழ் பெற்ற புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்வீர்கள். தந்தை உங்கள் உயர்வு உறுதுணையாக இருப்பார். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. சிலருக்கு தொழில் மற்றும் உத்யோக ரீதியாக விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கலாம். புகழ் செல்வாக்கு கவுரவம் கூடும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 5 6 7
பரிகாரம்: சென்னை மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரரை வெள்ளிக்கிழமை சென்று வழிபடுவதால் எதையும் ஜெயிக்க கூடிய ஆற்றல் உருவாகும்.