17-9-24 முதல் 17-10-24 வரை
வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 11 ல் குருவின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உங்களுடைய இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 3 ல் கேது இருப்பதால் மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். தங்க ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. வீடு வாகனம் சீர்படுத்த செலவினங்கள் ஏற்படும். குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். கணவன்,மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. 11 ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். விடா முயற்சி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரும்.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 15,16,17
பரிகாரம்: பழனி முருகப்பெருமானை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.