
18-8-23 முதல் 17-9-23 வரை
எதிலும் கண்ணியத்தோடுசெயல்படுவீர்கள். ராசிக்கு யோகாதிபதியாகிய சூரிய பகவான் 9 ல் செவ்வாய் மற்றும் புதனுடன் சஞ்சரிப்பதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். எதையும் வெல்லும் ஆற்றல் அதிகரிக்கும். சரியான நேரத்தில் உங்களுக்கு சரியான வழிகாட்டி கிடைப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். 3 ல் சனி இருப்பதால் எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. கடன் பிரச்னைகள் அகலும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். குழந்தைகள் உடல் நலம் பெறும். பூர்வீக சொத்து விஷயங்கள் சுமூகமாக முடியும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். முக்கிய பிரமுகர் அறிமுகம் நட்பும் கிடைக்கும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்கள் திறமை உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் செல்வாக்கு கூடும்.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 10 11 12
பரிகாரம்: மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீகுரு ராகவேந்திரரை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவதால் வாழ்வு மேம்படும்.