
18-8-23 முதல் 17-9-23 வரை
மற்றவர்களுக்கு அதிகம் உதவும் மனப்பான்மையோடுவிளங்குவீர்கள். ராசிக்கு யோகாதிபதியாக சுக்கிர பகவான் 7 ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். 2 ல் சனி இருப்பதால் பொருளாதாரங்களில் ஏற்ற தாழ்வு வந்து நீங்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். எதிரிகளால் பிரச்னை வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். 10ல் கேது இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. சில நேரங்களில் தகுதிக்கு குறைவான பணிகள் செய்ய நிர்பந்திக்கப்படலாம். பொறுமை தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 18, 19 செப்டம்பர் 13 14 15
பரிகாரம்: சோளிங்கரில் உள்ள நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமை சென்று வழிபடுவதால் பொருளாதார நிலை மேம்படும்.