17-7-25 முதல் 16-8-25 வரை
எப்போதும் எல்லோருக்கும் நல்லதை மட்டுமே நினைக்கும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6ல் கேது பகவான் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். விலகி நின்ற உறவுகள் விரும்பி வரும். தடைபட்ட காரியங்கள் இனிதே முடியும். இருப்பினும் ஏழரைச் சனியில் ஜென்ம சனி நடப்பதால் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எதிலும் பொறுமை தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். சுக் 6ல் இருப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். புதன் 5ல் இருப்பதால் தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். உங்கள் வாழ்வில் சிறுசிறு தடைகள் பிரச்னைகள் இருந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். செவ்வாய் 6ல் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழிபாடு நன்மை தரும். தொழில் மற்றும் உத்யோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கலாம். உங்கள் திறமை உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 31 ஆகஸ்ட் 1, 2.
பரிகாரம்: பவானியில் உள்ள சங்கமேஸ்வரரை வியாழக்கிழமை சென்று வணங்க உடல் ஆரோக்கியம் மேம்பட்டு வாழ்வு வளம் பெறும்.